News March 28, 2024
காரைக்காலில் தேர்தல் அதிகாரி தலைமையில் ஆலோசனை

காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் தலைமையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாவட்ட தேர்தல் அதிகாரி வாகனங்கள், பேருந்துகளில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பணம், மதுபானம், பணம் கொண்டு செல்லப்படுகிறதா என்று தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
Similar News
News August 11, 2025
புதுவை: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை!

கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 57). கூலித்தொழிலாளி. இவர் 7 சிறுமி ஒருவரை தனது வீட்டுக்கு அழைத்துவந்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த அச்சிறுமியின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்ததன் அடிப்படையில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து தலைமறைவான வெங்கடாசலத்தை தேடி வருகின்றது.
News August 10, 2025
புதுவை: இளைஞர் கொலை போலீஸ் மீது நடவடிக்கை

புதுச்சேரியில் ரெஸ்ட்டோ பாரில் நடைபெற்ற மது விருந்தில் ஏற்பட்ட தகராறில் தமிழக வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது இது குறித்து அன்பழகன் இன்று (ஆக.10) செய்தியாளர்களிடம் கூறும்போது இளைஞர் படுகொலைக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுத்து பெரிய கடை காவல் நிலையத்தில் உள்ள அனைவரையும் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
News August 10, 2025
புதுச்சேரி மக்களின் கவனத்திற்கு ?

புதுச்சேரியில் அநேக இடங்களில் அடைமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.