News April 16, 2025
காரைக்காலில் கிரேன் மோதி ஒருவர் பலி

காரைக்காலைச் சேர்ந்த செல்வராஜ் (63) நேற்று நித்திஸ்வரன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில் முன் சக்கரத்தில் சிக்கி செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிலந்து வந்த போலீசார் செல்வராஜ் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மதுரையைச் சேர்ந்த கிரேன் டிரைவர் ஜேம்ஸ்ராஜ் கைது செய்யப்பட்டார்.
Similar News
News November 28, 2025
புதுச்சேரி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி, ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த நவம்பர் 4ம் தேதி முதல் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு படிவங்களை வினியோகம் செய்தனர். வாக்காளர்களின் படிவங்கள் சேகரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த அட்டவணையின்படி வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள் (டிச.4) ஆகும் என தெரிவித்தார்.
News November 28, 2025
புதுச்சேரி: 10th போதும் அரசு வேலை!

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.பணியின் வகை: மத்திய அரசு வேலை
2.பணியிடங்கள்: 14
3. வயது: 30க்குள் (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.18,000 – ரூ. 56,900
5. கல்வித் தகுதி: 10,12th
6. கடைசி தேதி: 29.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க.
News November 28, 2025
புதுச்சேரி: அரசு பணியாளர் தேர்வு அறிவிப்பு!

புதுச்சேரி அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்த்திருத்தத்துறை அரசு சார்பு செயலாளர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி. எஸ்.சி.) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் மற்றும் அமலாக்க அதிகாரி, கணக்கு அதிகாரி ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த ஆட்சேர்ப்பு சேர்ப்பு தேர்வு நாளை மறுநாள் 30ம் தேதி நடக்கிறது.


