News August 27, 2024
காரைக்காலில் அதிவேக வாகனங்கள் மீது அபராதம்

காரைக்கால் மாவட்டத்தில் வாகன விபத்தை தடுக்க வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதை விட அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்தும் வகையில் Speed Rador Gun கருவி மூலம் காரைக்கால் அடுத்த அம்மாள்சத்திரம் பகுதியில் காரைக்கால் மாவட்ட போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்று போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து அதிவேகமாக செல்லும் வாகனங்களை இந்த கருவி மூலம் கண்டறிந்து அபராதம் விதித்து வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
புதுவை: வெள்ள அபாய எச்சரிக்கை

புதுவை வில்லியனூர் தாசில்தார் சேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சங்கராபரணி ஆற்றில் நீரோட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் வீடூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீரினால் சங்கராபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரம் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.” எனத் தெரிவித்துள்ளார்.
News December 5, 2025
புதுச்சேரியில் போலியோ சொட்டு மருந்து முகாம்

புதுச்சேரியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வரும் டிசம்பர் 21-ம் தேதி அன்று மாபெரும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சட்டப்பேரவையில் நேற்று 5 குழந்தைகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி போலியோ சொட்டு மருந்தை வழங்கி, முகாமை தொடங்கி வைத்தார். அப்போது சுகாதாரத்துறை இயக்குநர் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
News December 5, 2025
புதுச்சேரி ராஜ் நிவாஸ் பெயர் மாற்றம்

புதுச்சேரியில் மத்திய அரசின் உத்தரவின்படி நேற்று (டிசம்பர் 04) புதுச்சேரி ‘ராஜ் நிவாஸ்’ மாளிகை ‘லோக் நிவாஸ்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ராஜ் நிவாஸ் பெயர்ப் பலகையில் ‘லோக நிவாஸ்’ என்ற புதிய பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. இனி புதுச்சேரி ஆளுநர் மாளிகை ‘லோக் நிவாஸ்’ என்று அழைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


