News January 10, 2025
காரில் கடத்தி 240 மது பாட்டில் பறிமுதல்

ஏர்வாரி பகுதியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சட்ட விரோத விற்பனைக்காக சென்னை பதிவெண் காரில் கடத்தி வந்த 240 பிராந்தி பாட்டில்களை ஏர்வாடி தர்ஹா காவல் நிலைய தனி பிரிவு காவலர் சேகர் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இது தொடர்பாக உத்திரகோசமங்கை அருகே ஆலங்குளத்தைச் சேர்ந்த குமார்(33), ராஜா(35), கணபதி(37) ஆகிய 3 பேரை ஏர்வாடி தர்ஹா போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 8, 2025
ஆர்.எஸ்.மங்கலம் உப மின்நிலையத்தில் மின்தடை

ஆர்.எஸ்.மங்கலம் உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை(டிச.9) நடைபெற உள்ளது. இதனால் ஆர்.எஸ்.மங்கலம் டவுன், செட்டியமடை, சூரமடை, பெருமாள் மடை, சிலுகவயல், ஆவெரேந்தல், பாரனூர், கலங்காபுலி, சனவேலி, சவரியார்பட்டினம், புள்ளமடை, கவ்வுர், ஏ.ஆர்.மங்கலம், ஆப்ராய், பெத்தனேந்தல், கற்காத்தக்குடி, புத்தனேந்தல் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.
News December 8, 2025
முதலமைச்சரிடம் ராமநாதபுரம் கலெக்டர் வாழ்த்து

ஒன்றிய அரசின் தேசிய நீர் விருது, நீர் பாதுகாப்பில் பொதுமக்களின் பங்களிப்பு விருதுகளை ராமநாதபுரம் பெற்றது. இதை தொடர்ந்து
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இவ்விருதை மதுரையில் நேற்று (டிச.7) காண்பித்து வாழ்த்து பெற்றார். கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யாஷீநிகம், உடன் உள்ளார்.
News December 8, 2025
ராம்நாடு:ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

ராம்நாடு மக்களே, உங்கள் ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை தெரிஞ்சுக்க அலையவேண்டிய அவசியம் இல்லை… இனி வீட்டிலிருந்தே தெரிஞ்சுக்க சூப்பரான வழி. உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்புங்க. கடை திறப்பு தகவல்கள் உங்க போனுக்கே வரும். ரேஷன் தொடர்பான புகார்களை பதிவு செய்ய, PDS 107 என டைப் செய்து அனுப்புங்க.SHARE பண்ணுங்க..


