News April 18, 2025
காரமும் மணமுமிக்க விளாத்திகுளம் முண்டு வத்தல்

தூத்துக்குடி மாவட்டத்தின் வடக்கு பகுதிகளில் மானாவாரி பயிர்களான வத்தல், மக்காச்சோளம், பாசிப்பயிர், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக விளாத்திகுளம், புதூர் பகுதியில் சுமார் 25 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் முண்டு வத்தல் மற்றும் சம்பா வத்தல் சாகுபடி நடக்கிறது. கரிசல் நிலங்களில் முண்டு வத்தல் விளைவிக்கப்படுவதால் அதன் ருசி, காரத்தன்மை அதிகமாக இருக்கிறது.
Similar News
News November 17, 2025
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி

உடன்குடி அனல்மின் நிலைய கட்டுமானப்பணிகளுக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அனல்மின் நிலையத்தில் முதல் பாய்லர் சுத்தம் செய்ய சென்ற அசாமைச் சேர்ந்த தொழிலாளி முன்னா குர்மி (37) 15 அடிஏணியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு பின் மண்டையில் பலத்தகாயம் ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார். குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News November 17, 2025
தூத்துக்குடி வி.ஓ.சி துறைமுகத்தின் புதிய மைல்கல்

தூத்துக்குடி VOC துறைமுகம் அக்டோபர் 2025ல் 39,41,283 டன் சரக்குகளை நிர்வகித்து சிறப்பான சாதனைப் படைத்துள்ளது. இது 2024 அக்டோபரில் பதிவு செய்யப்பட்ட 35,52,567 டன்னுடன் ஒப்பிடும்போது 10.94% உயர்வைக் காட்டுகிறது. செயல்திறன் மற்றும் கடல்சார் சேவை தரத்தை மேம்படுத்தும் துறைமுகத்தின் தொடர்ந்த முயற்சியின் பலனாக இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளது.
News November 17, 2025
3.8 கிலோ கஞ்சா பதுக்கிய மூன்று பேர் கைது

தூத்துக்குடி மடத்தூர் சோரீஸ்புரத்தில் உள்ள லாரி செட் ஒன்றில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக சிப்காட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்குள்ள அறையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3. 8 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக தூத்துக்குடி வண்ணார் தெரு அரிகிருஷ்ணன், ரவிக்குமார், சந்திரசேகர் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.


