News April 19, 2025
காயல்பட்டினம் திரவ பிரியாணி தெரியுமா?

இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் காயல்பட்டினத்தில் பகல், இரவு வேலைகளில் கிடைக்கும் ஒரு வகை திரவ உணவு கறி கஞ்சி. இதனை திரவ பிரியாணி என்றும் அழைக்கிறார்கள். மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்த கறி கஞ்சி அரிசி காய்கறி பாசிப்பயிறு இறைச்சி துண்டு, மஞ்சள் இஞ்சி போன்றவைகளால் தயாரிக்கப்படுகிறது. இந்த கறிக்கஞ்சியை ஒரு முறை சுவைத்து பார்த்தால், பின் காயல்பட்டினம் சென்றால் இதனை ருசிக்காமல் இருக்க மாட்டீர்கள்.
Similar News
News October 14, 2025
பழையகாயல்: கொலை வழக்கில் 4 பேர் கைது

பழையகாயல் அருகே தெற்குகோவங்காட்டை சேர்ந்த கூலித்தொழிலாளியான செல்வகுமார் கடந்த 11ம் தேதி இரவு மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்து வந்த ஆத்தூர் போலீசார் செல்வகுமாரின் அண்ணன் விஜயகுமார் மகனான ராஜேஷ்குமார், அவரது நண்பர்களான பாலமுகேஷ், பாலவிக்னேஷ், சபரிவாசன் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரித்தனர். நிலப்பிரச்சனை காரணமாக ஏற்பட்ட முன்விரோதத்தால் இந்த கொலை நடந்துள்ளது.
News October 14, 2025
தூத்துக்குடி இன்று இரவு ரோந்து போலீஸ் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு நேரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் விவரங்களை தற்போது கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அவசர காலங்களில் பொதுமக்கள் 100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
News October 13, 2025
தூத்துக்குடி: கஞ்சா வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் கஞ்சா விற்பனை செய்ததாக தெற்கு சங்கரப்பேரி சேர்ந்த உதாண்டு முருகன் என்பவரை சிப்காட் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், உத்தாண்டு முருகனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டதை அடுத்து இன்று அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.