News August 27, 2024
காமெடி நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்

காமெடி நடிகர் பிஜிலி ரமேஷ் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சமீபத்தில் அளித்த பேட்டியில் கூட, குடிப்பழக்கத்தால்தான் தனது வாழ்க்கை இப்படி மாறியதாகவும், அதனால் யாரும் குடிக்கு அடிமையாக வேண்டாம் எனவும் தெரிவித்திருந்தார்.
Similar News
News November 28, 2025
சென்னை: புறநகர் ரயிலில் சாகசம்.. ஒலித்த எச்சரிக்கை!

நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் சென்னை புறநகர் ரயிலில், சிலர் படிக்கட்டில் தொங்குவது, ரீல்ஸ் எடுப்பது, சாகசம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், இனி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான உதவிகளுக்கு, பயணிகள் ரயில்வே உதவி எண் 139-ஐ தொடர்பு கொள்ளலாம்.
News November 28, 2025
புறநகர் ரயிலில் சாகசம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!

நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கும் சென்னை புறநகர் ரயிலில், சிலர் படிக்கட்டில் தொங்குவது, ரீல்ஸ் எடுப்பது, சாகசம் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், இனி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது. பாதுகாப்பு தொடர்பான உதவிகளுக்கு, பயணிகள் ரயில்வே உதவி எண் 139-ஐ தொடர்பு கொள்ளலாம்.
News November 27, 2025
முதல்வர் தலைமையில் எம்.பி-க்கள் கூட்டம்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 1ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பான திமுக எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், “வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறும்” என கூறியுள்ளார்.