News November 24, 2024
கானா பாடகி இசைவாணிக்கு கொலை மிரட்டல்

மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக ராயபுரத்தைச் சேர்ந்த பிரபல கானா பாடகி இசைவாணி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில், கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் ‘I Am Sorry ஐயப்பா’ என்ற விழிப்புணர்வு பாடலை பாடியதாகவும், அதன்பின் தமது செல்போனை தொடர்பு கொண்டு மர்ம நபர்கள் சிலர் அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 1, 2025
சாலைகளை சீரமைக்க ரூ.15 கோடி செலவில் புதிய திட்டம்

சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகள் சேதமாவதை தொடர்ந்து 15 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. சாலை பணியாளர்களுக்கு கூடுதல் தொகை வழங்கப்பட இருக்கிறது. வடகிழக்கு பருவமழை முடிந்தவுடன் ₹37 கோடியில் 286 சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. தற்போது, 257 சாலைகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்று நிலைக்குழு (பணிகள்) தலைவர் தெரிவித்துள்ளார்.
News November 1, 2025
சென்னையில் நவ :5 ல் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கூட்டம்

சென்னையில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் நவம்பர் 5 ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் காலை 10.30 மணியளவில் அனைத்து மாவட்டத்தின் செயலாளர்கள் உடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார் அ.தி.மு.கவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் பின்பு இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
News November 1, 2025
அக்டோபர் மாதத்தில் 93.27 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம்

2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 93,27,746 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக அக்டோபர் 17ம் தேதி மட்டும் 4,02,010 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பான சேவைகளை வழங்கி வரும் மெட்ரோ நிறுவனத்திற்கு பொதுமக்களின் ஒத்துழைப்புக்கு நன்றி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


