News August 14, 2024
காந்தி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா

நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாட்டம் நாளை நடைபெறுகிறது. சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் காந்தி விளையாட்டு மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தேசிய கொடியினை ஏற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார் என ஆட்சியர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளனர்.
Similar News
News October 14, 2025
சேலத்தில் 5 பேர் மீது குண்டாஸ்!

சேலம்: வேடுகாத்தான் பட்டியில் கடந்த அக்.16ஆம் தேதி நடந்த கோயில் திருவிழா தகராறில் மோகன்ராஜ் என்பவரை 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியதில் உயிரிழந்தார். இதில் ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தங்கராஜ், இளங்கோ, சூர்யா, பிரகாஷ், கவின் ஆகிய ஐந்து பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையாளர் அனில் குமார் கிரி உத்தரவிட்டுள்ளார்.
News October 14, 2025
சேலத்தில் பட்டாசு விற்பனை தீவிரம்!

சேலம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஐந்து நாட்கள் உள்ள நிலையில் சேலத்தில் பட்டாசு கடைகளில் புதியவகை ரக பட்டாசுகள் விற்பனைக்கு குவித்து வருகின்றனர். மேலும், சேலம் 5 ரோடு, குரங்கு சாவடி, அழகாபுரம் , திருவா கவுண்டனூர் பைபாஸ் பகுதிகளில் ஆங்காங்கே தற்காலிக பட்டாசு கடைகளில் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.
News October 14, 2025
சேலத்தில் நாளை முகாம் நடைபெறும் இடங்கள்!

சேலத்தில் நாளை அக்டோபர் 15 புதன்கிழமை உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் 1)அம்மாபேட்டை சோழிய வேளாளர் திருமண மண்டபம் நாராயண நகர்2) தலைவாசல் ஏ எஸ் மஹால் சாத்தப்பாடி 3)கொங்கணாபுரம் திருக்குறள் திருமண மண்டபம் புதுப்பாளையம்4)ஓமலூர் வி பி ஆர் சி கிராம சேவை மைய கட்டிடம் 5)காடையாம்பட்டி ஸ்ரீ ராமச்சந்திரா மஹால் காருவள்ளி 6)சங்ககிரி பருவத ராஜகுல திருமண மண்டபம் காவேரிப்பட்டி.