News April 18, 2025
காதல் திருமணம் செய்தவர் தந்தை மீது தாக்குதல்

கடையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுந்தரம். இவரது மகன் முப்புடாதி (25) இவர் கீழ கடையம் பகுதியை சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் .இந்த நிலையில் பெண்ணின் உறவினர்கள் முப்புடாதியின் தந்தையை அவதூறாக பேசி அடித்து தாக்கினர் .இதுகுறித்து சுந்தரம் அளித்த புகார் அடிப்படையில் பெண்ணின் உறவினர்கள் பாலா ,ஷங்கர் ஆகிய இருவரை நேற்று கைது செய்தனர் ஒருவரை தேடி வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
முதலமைச்சர் நிவாரண உதவித்தொகை வழங்கல்

திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில்(24.11.2025) அன்று நடந்த சாலை விபத்தில் இறப்பு ஏற்பட்டுள்ள 6 நபர்களுக்கு நிவாரணத் தொகையாக தலா ரூ.3 இலட்சம் வீதம் ரூ.18 இலட்சமும், பலத்த காயம் அடைந்த 35 நபர்களுக்கு தலா ரூ.10 இலட்சம் வீதம் ரூ.35 இலட்சமும் மற்றும் லேசான காயம் அடைந்த 18 நபர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.9 லட்சம் மொத்தம் 59 நபர்களுக்கு ரூ.62 இலட்சம் மதிப்பிலான நிவாரண உதவி வழங்கப்பட்டது.
News December 1, 2025
விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரண தொகை

தென்காசி மாவட்டம் , துரைச்சாமி புரத்தில் 24.11.25 அன்று நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தின் வாரிசுதாரர்களிடம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரண தொகையினை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் K.K.S.S.R. ராமச்சந்திரன் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
News December 1, 2025
தென்காசி பெண்கள் கவனத்திற்கு – அரசு வேலை!

தென்காசி மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு (பெண்)வழக்கு பணியாளர் பணியிடத்திற்கு ஒரு காலிப்பணியிடத்திற்கு ரூ.18,000 தொகுப்பூதியம் அடிப்படையில் நியமனம் செய்யப்படவுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. <


