News April 3, 2025

காதலியை கல்லால் அடித்து கொன்ற காதலன்

image

அனகாபுத்தூரைச் சேர்ந்த பாக்கியலட்சுமி (33) கணவரை பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். வீட்டருகே வசிக்கும் ஞானசித்தன் உடன் பாக்யலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (ஏப்ரல் 1) பாக்கியலட்சுமி வேறு ஒரு நபருடன் செல்போனில் பேசி கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்து ஞானசித்தன் கடப்பா கல்லை எடுத்து பாக்கியலட்சுமி தலையில் போட்டு கொலை செய்தார். போலீசார் அவரை கைது செய்தனர்.

Similar News

News April 18, 2025

செங்கல்பட்டு மாவட்ட சில செய்திகள்

image

➡தாம்பரம் ரயில் நிலையத்தில் நள்ளிரவில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தங்க பெண்களுக்கு ஓய்வு அறை அமைக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி. ➡ செய்யூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.3.5 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் அரசாணை வெளியீடு. ➡மாமல்லபுரத்தில் ரூ.30 கோடி செலவில் சுற்றுலா உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று அறிவிப்பு.

News April 18, 2025

செங்கல்பட்டில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கலெக்டர் வளாகத்தில் வரும் 25-ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணிவரை நடைபெற உள்ளது.மேலும் தகவலுக்கு 044-27426020, 60933 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் செய்யுங்கள்

News April 18, 2025

மாமல்லபுரத்தில் ஒருநாள் இலவச அனுமதி

image

உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க இன்று (18.04.2025) ஒருநாள் மட்டும் இலவச அனுமதி என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு இன்று பொதுமக்கள் அனைவரும் இந்த இலவச அனுமதியை பயன்படுத்தி மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிடலாம். நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

error: Content is protected !!