News August 24, 2024

காதலிக்க மறுத்த மாணவி மீது தாக்குதல்

image

கிருமாம்பாக்கத்தை சேர்ந்த மாணவியை அதே பகுதியை சேர்ந்த சந்துரு காதலிக்குமாறு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவர் அவரை காதலிக்க மறுக்கவே நேற்று முன்தினம் மாணவி கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது அங்கு வந்த சந்துரு அவரை வண்டியில் அமருமாறு கூறியுள்ளார். மாணவி மறுக்கவே அடித்து கீழே தள்ளியுள்ளார். இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Similar News

News September 18, 2025

புதுச்சேரியில் மத்திய அரசு திட்ட துவக்க விழா!

image

ஆரோக்கியமான பெண்கள், வலிமையான குடும்பம் சுவஸ்த்ய நாரி சக்த் பரிவார் அபியான் என்கிற புதிய திட்டத்தை பாரத பிரதமர் மோடி அறிவித்து துவக்கி உள்ளார். கம்பன் கலையரங்கில் இந்த திட்டத்தின் துவக்க விழா நடந்தது. இதில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News September 17, 2025

புதுவையில் அரசு பள்ளியில் ஆட்சியர் ஆய்வு

image

புதுவை மாநிலம் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட புதுக்குப்பம் அரசு தொடக்க பள்ளியில், இன்று மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்பொழுது பள்ளியில் படிக்கும் மாணவர்களிடம் கல்வித்திறனை கேட்டறிந்த ஆட்சியர் மாணவர்களிடம் கல்வி சம்பந்தமாக கலந்துரையாடினார்கள். மேலும் நன்கு படிக்க வேண்டும் எனவும் மாணவர்களிடம் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

News September 17, 2025

காரைக்கால் அருகே மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரி பகுதியில் உள்ள கிராம தொழிற்பேட்டை மையத்தில் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் இன்று திடீர் கள ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள், உற்பத்தி திறன், வணிகம் குறித்து ஆய்வு செய்ததுடன் நிறுவனங்களின் தேவைகள் குறித்தும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் அதிகாரியுடன் ஆட்சியர் கலந்துரையாடினார்கள்.

error: Content is protected !!