News April 28, 2025

காதலிக்கு  நிச்சயமானதால் மாணவர் தற்கொலை

image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரை சேர்ந்த தனலட்சுமி – அர்ச்சுனன் தம்பதியரின் மகன் சரவணகுமார் (18) என்பவர் கோவில்பட்டியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் இவர் காதலித்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயமான விரக்தியில் கடந்த சனிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 28, 2025

தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு விடுமுறையா? – விளக்கம்

image

டிட்வா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவ.29) விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது. இது தவறான தகவல் என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. மழை நிலவரத்தை பொறுத்து மாவட்ட நிர்வாகேமே விடுமுறை அறிவிக்கும் என தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT

News November 28, 2025

BREAKING தூத்துக்குடியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டிட்வா புயல், சென்னைக்கு அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிட்வா புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (நவ.29) விடுமுறை அறிவித்து தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது எனவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. SHARE IT

News November 28, 2025

தூத்துக்குடியில் இனி 3 வேலை இலவச உணவு

image

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் இன்று மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாநகராட்சியில் பணிபுரியும் 1702 தூய்மை பணியாளர்களுக்கு 26 இடங்களில் 3 வேலை இலவச உணவு வழங்குவதற்காக 3 ஆண்டுகளுக்கு ரூ.8.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

error: Content is protected !!