News April 28, 2025

காட்பாடி ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

image

காட்பாடி சேனூரைச் சேர்ந்த பிரதீப் (17) 10ம் வகுப்பு மாணவன். இவர் நேற்று தனது நண்பர்களுடன் வீரக்கோயில் மேட்டில் உள்ள ஏரியில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதியில் இறங்கி குளித்த போது திடீரென மூழ்கினார். சக நண்பர்கள் போராடி மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விருதம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 7, 2025

வேலூர்: HOTEL-ல தரமற்ற உணவா? இந்த நம்பருக்கு கால் அடிங்க!

image

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீபத்தில் சென்னை உணவகத்தில் தேரை, திருவள்ளூர் உணவகத்தில் எலி, கிருஷ்ணகிரி உணவில் பாம்பு என குற்றசாட்டு எழுந்தது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ஷேர்!

News December 7, 2025

வேலூர்: தொழிலாளி தற்கொலை – போலீசார் விசாரணை!

image

கே.வி.குப்பம் தாலுகா நீலகண்டபாளையம் கிராமத்தை சேர்ந்த மகாதேவனின் மகன் பெருமாள் (40), கூலித் தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. நேற்று வீட்டுக்கு வந்த பெருமாள் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 7, 2025

வேலூரில் 2,350 மாணவர்கள் திறனாய்வு தேர்வு எழுதினர்!

image

வேலூர் மாவட்டத்தில் ஊரக திறனாய்வு தேர்வுகள் நேற்று நடந்தது. 11 மையங்களில் நடந்த இந்த தேர்வை எழுத 2,470 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். அதில் 2,350 பேர் எழுதினர். 120 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வையொட்டி முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் என 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!