News December 6, 2024
காட்பாடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் 715 பயனாளிகளுக்கு 6.59 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக நீர் வனத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி, எம்பி கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமுலு விஜயன் மேயர் சுஜாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 6, 2025
வேலூர்: தனியார் பள்ளி பேருந்தில் சிக்கி சிறுமி பலி

வேலூர்: வரதரெட்டிபள்ளி பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் – மோனிகா தம்பதியின் மகள் கீர்த்தீஷா (4) பரதராமியில் உள்ள தனியார் பள்ளியில் LKG படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (நவ.5) மாலை பள்ளி பேருந்தில் இருந்து இறங்கி முன்பக்கமாக நடந்து வந்துள்ளார். இதை கவனிக்காமல் ஓட்டுநர் தமிழ்செல்வன் பேருந்தை இயக்கியதால், சிறுமி மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
News November 6, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் இன்று (நவ.5) இரவு முதல் நாளை (நவ.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
வேலூர் ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம் – கலெக்டர் தகவல்

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் விதமாக, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அளவில் வரும் நவம்பர் 8-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு திருத்த முகம் நடைபெற உள்ளது. இதில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


