News August 2, 2024
காட்பாடியில் ஓடும் ரயிலில் இறங்கிய கல்லூரி மாணவன் பலி

கேரளா மாநிலம் எர்ணாகுளம் சேர்ந்தவர் ஆகாஷ். இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 4 ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவரது சகோதரியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க சென்னையில் இருந்து காட்பாடி வரை செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். அவர் தூக்கத்தில் இருந்த போது ரயில் காட்பாடி கடந்தது. இதனால் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது தவறி கீழே விழுந்து பலியானார்.
Similar News
News August 10, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (ஆக.9) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News August 9, 2025
அனைத்து ஊராட்சியிலும் கிராம சபைக்கூட்டம் நடத்த உத்தரவு

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் சுதந்திர தினமான 15.08.2025 அன்று முற்பகல் 11.00 மணிக்கு தவறாமல் கூட்டப்பட வேண்டுமென அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் க.சிவ சௌந்தரவல்லி உத்திரவு பிறப்பித்துள்ளார்.
News August 9, 2025
திருப்பத்தூர்: தேவையற்றை மெஸேஜ் வருகிறதா?

திருப்பத்தூர் மாவட்ட மக்களே உங்கள் செல்போனுக்கு மிகப் பெரிய பரிசுத் தொகை விழுந்துள்ளதாகவும், பொருட்கள் கிடைத்துள்ளதாகவும் வரும் செய்திகளை நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம் என திருப்பத்தூர் மாவட்ட சைபர் கிரைம் காவலர்கள் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அப்படி யாரேனும் உங்களை தொடர்பு கொண்டால் 1930 என்ற இந்த எண்ணிற்கோ அல்லது இந்த <