News December 5, 2024
காட்டுப்புத்தூரில் காவிரி ஆற்றில் ஆண் பிணம்

காட்டுப்புத்தூரை அடுத்த ஸ்ரீராமசமுத்திரம் மதுரை காளியம்மன் கோவில் அருகே உள்ள காவிரி ஆற்றில் அழுகிய நிலையில் 50 வயதுமதிக்கதக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந் தார். அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர், எப்படி இறந்தார்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 27, 2025
திருச்சி: மக்களே… இனி இது அவசியம்!

திருச்சி மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு TN-ALERT என்ற APP-ஐ பதிவிறக்கம் செய்து, வானிலை தொடர்பான தகவலை தெரிந்து கொள்ளலாம். இப்போதே பதிவிறக்கி நம் பாதுகாப்பை உறுதி செய்து முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
News October 27, 2025
தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு – அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் திருச்சி மாவட்டத்தில் மா, கொய்யா மற்றும் இதர பழ பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை கவாத்து செய்வதன் மூலம், மரத்தின் சுமையை குறைத்து பாதுகாக்கலாம். சாகுபடி செய்யப்பட்ட பரப்பினை அடங்கல் மற்றும் இ-அடங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் தோட்டக்கலை பயிர்களுக்கு உடனடியாக பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 27, 2025
திருச்சி: வாகன ஓட்டுநர்கள் தீக்குளிக்க முயற்சி

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்போது திருச்சி விமான நிலையத்தில் தனியார் வாடகை கார் ஓட்டுநர்களை அனுமதிக்க மறுப்பதாக கூறி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்கள் சங்கத்தினர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுக்க தவறியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.


