News March 24, 2025

காட்டுப்பன்றி தாக்கிப் பெண் காயம்

image

கூமாப்பட்டி ராமசாமியாபுரத்தைச் சேர்ந்தவர் பூரணம். ஊருக்கு மேற்கே கல்யாணி ஓடை அருகே இவருக்கு விவசாய நிலம் உள்ளது. அதில் நெல் மற்றும் தென்னை விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியை சேர்ந்த இரு பெண்களை அழைத்துக் கொண்டு நெல் வயலுக்கு, களை எடுக்கச் சென்றார். அப்போது காட்டுப்பன்றி தாக்கியதில் பூரணம் காயமடைந்தார். இதுகுறித்து கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 24, 2025

JUST IN விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது இதன் காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (24.11.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா உத்தரவிட்டுள்ளார் என விருதுநகர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 24, 2025

விருதுநகர்:கம்மியான பள்ளியில் பைக்,கார் வேண்டுமா..

image

விருதுநகர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ரேசன் அரிசி கடத்தலில் சிக்கியவர்கள் மீது வழக்கு பதிந்தனர். இதில் 7 இருசக்கர வாகனங்கள், 13 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் குடிமைபொருள் வழங்கல் குற்றபுலனாய்வு அலுவலகத்தில் நவ.25 அன்று ஏலம் விடப்பட உள்ளது.SHARE பண்ணுங்க.

News November 24, 2025

பூர்த்தி செய்து 495 படிவங்கள் திரும்ப பெறப்பட்டுள்ளன

image

வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பு உதவி மையங்கள் மூலம் 429 மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கான படிவங்கள், திருநங்கை வாக்காளர்களிடமிருந்து 30, முதியோர் இல்லங்களில் வசிக்கும் வாக்காளர்களிடமிருந்து 36 படிவங்கள் என மொத்தம் 495 படிவங்கள் பெறப்பட்டுள்ளன என ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!