News April 20, 2025
காட்டுப்பன்றிகள் மோதல்: ஒருவர் படுகாயம்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தைச் சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காசாளராக பணியாற்றி வருபவர் கண்ணன்(54). இவர் நேற்று காலை 10 மணியளவில் அலுவலகத்திற்கு தனது பைக்கில் சத்திரம் கிராமம் அருகே சென்றபோது சாலையின் குறுக்கே திடீரென 4 காட்டுப்பன்றிகள் ஓடி வந்து பைக் மீது மோதியது. இந்த விபத்தில் நிலைத்தடுமாறிய கண்ணன் கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்தார்.
Similar News
News November 14, 2025
அரியலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க!
News November 14, 2025
அரியலூர் தொழில்நுட்ப பணிகள் II-க்கான தேர்வு

அரியலூர் மாவட்டத்தில் அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் II-க்கான தேர்வு வரும் (நவ – 16) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை மற்றும் பிற்பகல் 02.30 மணி முதல் 05.30 வரை அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகளில் நடைபெறுகிறது. தேர்வு எழுதவரும் தேர்வர்கள் அனைவரும் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட சரியான நேரத்தில் வர ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
அரியலூர்: புனித பயணத்திற்கு மானியம் அறிவிப்பு

தமிழகத்தில் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 550 கிறித்தவர்களுக்கு ECS முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 01.11.2025-க்கு பிறகு ஜெருசலேம் புனிதபயணம் மேற்கொண்ட கிறித்தவ மத பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு https://www.bcmbcmw.tn.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


