News May 12, 2024
காஞ்சி: மே.14 வரை பார்க்கலாம்

கோவையில் இருந்து சென்னை வரை இருக்கும் அனைத்து மாவட்ட மக்களும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மே.14 வரை வெறும் கண்ணால் பார்க்கலாம் என அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தெரிவித்துள்ளது. அதன்படி காஞ்சி உள்ளிட்ட 11 மாவட்ட மக்கள் மே.12 அன்று காலை 4.14, இரவு 7.07, மே.13 இல் காலை 5.00, மே.14 இல் காலை 4.15 மணிக்கு காணலாம் என நாசா தெரிவித்துள்ளது.
Similar News
News April 20, 2025
காஞ்சியில் இருக்கும் அதிசய கோயில்

உடல் நலக்குறைவு உள்ளவர்கள், ஜாதகத்தில் தோஷம் உள்ளவர்கள் இக்கோயிலுக்கு வந்து வணங்கி சென்றால், நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. காஞ்சிபுரம் கம்பள தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் கோயில், பெரும்பாலானோருக்கு அறியப்படாத கோயிலாகவே இருந்து வருகிறது. பல்லவ மன்னர் ராஜசிம்மனால் இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டது. கோயில் சுவர் முழுவதும், சிற்பங்கள் நிறைந்து காணப்படும். ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
திருமணத்தடை நீக்கும் வைகுண்ட பெருமாள்

குன்றத்தூர் அருகேவுள்ள மாங்காட்டில் ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஸ்ரீ காமாட்சியின் திருமணத்தை காண வந்த விஷ்ணு பகவான், திருமணம் இடம் மாற்றப்பட்ட பின் இங்கேயே கோயில் கொண்டார் . இக்கோயிலின் சிறப்பம்சம் பணப்பிரச்னையால் தடை படும் திருமணங்கள் நடைபெற இக்கோயிலுக்கு வந்து பக்தர்கள் வழிபடுகின்றனர். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News April 19, 2025
காஞ்சியில் நாளைய (ஏப்ரல் 20) மின்தடை விவரம்

ஸ்ரீபெரும்புதுார் துணைமின் நிலையம்: மப்பேடு, செங்காடு, உசேன் நகர், விஸ்வநாதகுப்பம், அமுஞ்சிவாக்கம், சமத்துவபுரம், இருங்காட்டுக்கோட்டை, நெமிலி, சிவன்தாங்கல், என்.ஜி.ஓ., காலனி, சுகம்தரும்பேடு, தண்டலம், மேவலுார்குப்பம், மண்ணுார், நயப்பாக்கம், பாப்பரம்பாக்கம் ரோடு, வளர்புரம், கிறிஸ்தவ கண்டிகை, செட்டிபேடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் பண்ணுங்க