News April 16, 2024
காஞ்சி: சித்திரை மாத திருவிழா துவக்கம்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாத திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது. தினந்தோறும் காலை மற்றும் மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கச்சபேஸ்வரர் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். வரும் திங்கள் 22ஆம் தேதி அன்று திருத்தேர் உற்சவம் நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்தனர்.
Similar News
News September 15, 2025
குன்றத்தூரில் திமுக நிர்வாகிகளுக்கு அமைச்சர் பரிசு

குன்றத்தூர் மத்திய மற்றும் தெற்கு ஒன்றிய தி.மு.க நிர்வாகிகள் கிளை செயலாளர்கள், B.L.A.2, B.D.A ஆலாசனைக் கூட்டம் நேற்று (செப்.,14) நடைபெற்றது. இதில் காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறப்புரையாற்றி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்த்தல் பணியினை நடத்தி முடித்த நிர்வாகிகள் 600 பேருக்கு சிறப்பு பரிசு வழங்கினார்.
News September 15, 2025
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை!

தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக செப்.,19ம் தேதி வரை தமிழகத்தில் பல மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் செப்.,17ம் தேதி கனமழைக்கான எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!
News September 15, 2025
காஞ்சிபுரம்: ஒரே நாளில் 577 வழக்குகள் முடித்து வைப்பு!

காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் லோக் ஆயுக்தா சமரச தீர்வு நிகழ்வு நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 577 வழக்குகள் தீர்வு காணப்பட்டு ரூ.7 கோடியே 47 லட்சத்து 81 ஆயிரத்து 325 இழப்பீடு தொகையை வழங்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் காஞ்சிபுரம் நீதிபதிகள் கலந்து கொண்டனர்.