News March 18, 2024

காஞ்சிபுரம்: 133 பேர் துப்பாக்கிகள் ஒப்படைப்பு

image

தேர்தல் விதிகள் அமலுக்கு வந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் இன்று காஞ்சிபுரம் மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 144 நபர்கள் துப்பாக்கி உரிமம் பெற்று வைத்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதி காரணமாக தற்போது 133 நபர்கள் ஒப்படைத்துள்ளதாகவும் , 11 நபர்கள் வங்கி பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதால்  அதிலிருந்து விலக்கல் கேட்டு கடிதம் அளித்துள்ளதாக தெரிவித்தார்

Similar News

News April 15, 2025

மாங்காய் பறிக்க சென்றவர் கீழே விழுந்தது உயிரிழப்பு

image

ஒரகடம், சென்னகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கங்காதரன் (33), வல்லம் சிப்காட் தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை அதே பகுதி விளையாட்டு திடலில் மாங்காய் பறிக்க சென்றுள்ளார். மரத்தில் இருந்து விழுந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தது தெரிந்தது. இதுகுறித்து ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News April 15, 2025

டிகிரி இருந்தால் போதும்; மெட்ராஸ் ஐகோர்டில் வேலை

image

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 சம்பளம் வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இந்த <>இணையதளத்தில் <<>>வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News April 15, 2025

பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்

image

பள்ளி மாணவ,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.இந்த நிலையில் மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ அல்லது அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற சூழலில் இருக்கும் மாணவர்களும், தேர்வு மற்றும் உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தகவல்களை பெற 14417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

error: Content is protected !!