News October 23, 2024
காஞ்சிபுரம் வீராங்கனைக்கு பாராட்டு விழா

காஞ்சிபுரம் மாவட்டம் புத்தேரியில் வசிக்கும் நீனா (21), கம்போடியா நாட்டில் நடந்த ஆசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் கலந்து கொண்டார். அபாரமாக விளையாடி, 1 தங்கம், 2 வெள்ளி பதக்கங்கள் வென்றார். இவருக்கு நேற்று காஞ்சிபுரத்தில் அறிஞர் அண்ணா பூங்கா வாக்கிங் குழு சார்பில், பூங்கா வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், வாக்கிங் குழுவினர் வீராங்கனை நீனாவை கௌரவித்து பரிசு வழங்கி பாராட்டினர்.
Similar News
News August 9, 2025
காஞ்சிபுரம் மக்களுக்கு முக்கிய தகவல்

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) அல்லது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யும் முன் அதற்கான ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். வீடியோ, புகைப்பட ஆதாரங்கள், பொருளை வாங்கியதற்கான ரசீது, கடையின் முழுமையான முகவரி உள்ளிட்ட ஆதாரங்களோடு புகார் செய்யும்போது அதிகாரிகள் உரிய விசாரணை செய்து கடையின் மீது நடவடிக்கை எடுப்பார்கள். இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.
News August 9, 2025
காஞ்சிபுரம் மக்களுக்கு முக்கிய தகவல்

காஞ்சிபுரத்தில், பேருந்து நிலையங்கள், ஓட்டல்களில் உணவு பொருட்களை MRP விலையைவிட கூடுதல் விலை கொடுத்து வாங்கிருப்பீர்கள். அவ்வாறு விற்பது குற்றம். கூடுதல் விலைக்கு விற்பது, காலாவதியான தேதியை மாற்றுவது, அதன்மேல் வேறு ஸ்டிக்கரை ஒட்டுவது போன்றவற்றை கண்டால் FSSAI-க்கு 94440 42322 என்ற வாட்சப் எண்ணுக்கு புகார் செய்யலாம். அல்லது சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகார் செய்யலாம். <<17350652>>தொடர்ச்சி<<>>
News August 9, 2025
காஞ்சிபுரம் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ரேஷன் கார்டு திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெறுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள ஆலப்பாக்கம், உத்திரமேரூரில் உள்ள சிறுபினாயூர், வாலாஜாபாத்தில் உள்ள உள்ளாவூர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தண்டலம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாமானது நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<17349015>>தொடர்ச்சி<<>>