News January 23, 2025
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சிறப்பு விருது

தேர்தல் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் ஆகியோருக்கு விருது வழங்கப்பட உள்ளது. தேசிய வாக்காளர் தின விழாவில், ஆளுநர் விருதை வழங்க இருப்பதாக தமிழக அரசு தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
காஞ்சிபுரம்: சிலிண்டர் மானியம் வருகிறதா?

சிலிண்டர் மானியம் சரியாகக் கிடைக்கிறதா என்பதை அறிய முதலில் www.mylpg.in என்ற இணையதளத்திற்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் HP Gas, Indane, அல்லது Bharatgas ஆகிய சிலிண்டர் நிறுவனத்தின் Logoவை கிளிக் செய்யவும். பின்னர் உங்களின் மொபைல் எண் அல்லது LPG ஐடியை உள்ளிடவும். இதன்பிறகு,மானியம் தொடர்பான விவரங்களும் தோன்றும். மானியம் வரவில்லை என்றால் pgportal.gov.in என்ற இணையதளத்தில் புகாரளிக்கலாம்.(SHARE)
News November 17, 2025
காஞ்சிபுரம்: B.E/B.Tech படித்தால் ரூ.50,000!

காஞ்சிபுரம்: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 17, 2025
காஞ்சிபுரத்தில் நாளை மின் தடை!

காஞ்சிபுரம்: ஓரிக்கை துணை மின் நிலையத்தில் நாளை(நவ.18) பராமரிப்புப் பணிகள் காரணமாக வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம், காமராஜர் வீதி, மேட்டுத் தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர், கலெக்டர் அலுவலகம், பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசா பேட்டை போன்ற பகுதிகளில் நாளை(நவ.18) காலை 9:00 – 4:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


