News August 10, 2024
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6194 மாணவர்களுக்கு உதவிதொகை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற தமிழ்ப் புதல்வன் திட்டத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான ஏ.டி.எம் கார்டை வழங்கினார். இதன் மூலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6,194 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
குறிப்பாக இதில், அரசு கலை, அறிவியல் கல்லூரியில் படிக்கும் 2,632 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
Similar News
News December 12, 2025
காஞ்சிபுரத்தில் மாபெரும் 4-வது புத்தக திருவிழா-2025

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நான்காவது மாபெரும் புத்தக திருவிழா-2025 தொடங்கப்படவுள்ளது. இப்புத்தக திருவிழா 19.12.2025 முதல் 29.12.2025 வரை 11 நாட்கள் நடைபெறுகின்றது. புத்தக திருவிழா நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி அறிவித்துள்ளனர்.
News December 12, 2025
மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு

13.12.2025 மற்றும் 14.12.2025 ஆகிய தேதிகளில் மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது அத்தேர்வானது நிர்வாக காரணங்களினால் டிச.27 மற்றும் டிச.28 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News December 12, 2025
காஞ்சிபுரம்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


