News August 3, 2024
காஞ்சிபுரம் மாணவனை வாழ்த்திய முதல்வர் ஸ்டாலின்

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் கிஷோருக்கு, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயில செல்வதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார். சென்னை கோட்டூர்புரம் பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட முதல்வர், மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் மடிக்கணினியை வழங்கி பாராட்டினார்.
Similar News
News November 17, 2025
காஞ்சிபுரம்: B.E/B.Tech படித்தால் ரூ.50,000!

காஞ்சிபுரம்: இந்திய ஸ்டீல் ஆணையத்தில் 124 ‘Management Trainee’ காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிக்க B.E/B.Tech படித்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.50,000 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க டிச.5ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News November 17, 2025
காஞ்சிபுரத்தில் நாளை மின் தடை!

காஞ்சிபுரம்: ஓரிக்கை துணை மின் நிலையத்தில் நாளை(நவ.18) பராமரிப்புப் பணிகள் காரணமாக வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரைமண்டபம், ரங்கசாமி குளம், காமராஜர் வீதி, மேட்டுத் தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரியார் நகர், தேனம்பாக்கம், முத்தியால்பேட்டை, களக்காட்டூர், கலெக்டர் அலுவலகம், பாலாறு தலைமை நீரேற்றம், சங்குசா பேட்டை போன்ற பகுதிகளில் நாளை(நவ.18) காலை 9:00 – 4:00 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 17, 2025
காஞ்சிபுரத்தில் மழை ; பள்ளிகளுக்கு விடுமுறையா..?

காஞ்சிபுரம்: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுபடி, இன்று(நவ.17) காஞ்சிபுரம் மாவட்டத்தில் கன முதல் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொட்ரந்து, வரும் நவ.21ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழை தொடர்ந்தால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளது.


