News April 18, 2025
காஞ்சிபுரம்: பொன் சேர வேண்டுமா…? இங்கு போங்க

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருவோணக்காந்தான் தளி ஓணக்காந்தேஸ்வரர் கோயிலின் சிறப்பு இங்கே சிவன் மூன்று லிங்கங்களாக காட்சி தருகிறார்.இது தவிர மற்றொரு விநாயகரான ஓங்கார கணபதியின் சிலையில் பக்தியுடன் காது வைத்து கேட்டால் ” ஓம் ” என்ற ஒலி கேட்பதாக சொல்வதுண்டு.இந்தத் தலத்தில் பக்தி பாடல்களை பாடினால் பொன், பொருள் சேர்க்கை ஏற்படும் என்பது நம்பிக்கை. பொன் சேர்க்க நினைப்பவர்களுக்கு பகிரவும்
Similar News
News October 29, 2025
காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (அக்.28) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News October 29, 2025
காஞ்சிபுரத்தில் 219 “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள் நிறைவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் ஜூலை முதல் அக்டோபர் வரை 224 முகாம்கள் திட்டமிடப்பட்டு, 219 முகாம்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், தெரிவித்துள்ளார். மேலும், அக்டோபர் 29 மற்றும் 31 தேதிகளில் வெங்காடு மற்றும் பிள்ளைப்பாக்கம் கிராமங்களில் முகாம்கள் நடைபெற இருப்பதாகவும் கூறினார்.
News October 28, 2025
காஞ்சி: சுற்றுசூழல் விருதுகளுக்கு விண்ணப்பம்

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் கல்வி, பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி துறையில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு 2024 சுற்றுச்சூழல் விருதுகள் வழங்கப்படுகிறது. விருது விவரங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் awards.tn.gov.in இல் கிடைக்கிறது. விருப்பமுள்ளவர்கள் நவ.14க்குள் விண்ணப்பிக்கலாம். மேலதிக தகவலுக்கு 044-24336421 தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.


