News April 26, 2025
காஞ்சிபுரம்: பட்டா, சிட்டா விவரங்களை பார்ப்பது எப்படி?

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் 1) மாவட்டம், 2) வட்டம், 3) கிராமம் 4) பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க!
Similar News
News April 27, 2025
காஞ்சிபுரம் ஊராட்சிகளுக்கு பறந்த கலெக்டரின் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1 அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். இந்த கூட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். மிக முக்கியமாக மக்கள் பார்வையிட ஊராட்சி தகவல் பலகையில் வரவு செலவு எழுதிடவும், வரவு செலவு கணக்கு குறித்து பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
News April 27, 2025
காஞ்சிபுரம் சிவன் கோயில்கள் பட்டியல்

▶உத்திரமேரூர் கேதாரீஸ்வரர் கோயில்
▶ஊத்துக்காடு மகாலிங்கேசுவரர் கோயில்
▶ஏகனாம்பேட்டை திருவாலீஸ்வரர் கோயில்
▶காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்
▶கோவூர் சுந்தரேஸ்வரர் கோயில்
▶கோனேரிக்குப்பம் வீரட்டானேசுவரர் கோயில்
▶குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோயில்
▶பனையூர் சிதம்பரேஸ்வரர் கோயில்
▶திருப்புட்குழி மணிகண்டீசுவரர் கோயில்
▶திருப்புலிவனம் வியாக்ரபுரீசுவரர் கோயில்
▶பனையூர் சிதம்பரேஸ்வரர் கோயில்
News April 27, 2025
கணவன், மனைவி சண்டையா?

காஞ்சிபுரம், மாகரல் பகுதியில் அமைந்துள்ள மாகறலீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாக உள்ளது. இந்த கோயிலுக்கு வந்து வழிபாடு செய்து அபிஷேகத் தீர்த்தத்தை சாப்பிட ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்களும், எலும்பு முறிவு, கண்பார்வை குறைவு, பக்கவாதம் போன்ற நோய்களின் தாக்கம் குறையும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேரவும், கிரக தோஷம் நீங்கவும், குழந்தை பாக்கியமும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஷேர் பண்ணுங்க