News May 10, 2024
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் சிறப்பு!

காஞ்சிபுரத்தில் உள்ள கைலாசநாதர் கோயில் தேவாரம் பாடப்பெற்றத் தலமாகும். பல்லவர்களின் கட்டடக் கலையை பற்சாற்றும் விதத்திலேயே இக்கோவிலும் அமைந்துள்ளது. இக்கோயில் 700ஆம் ஆண்டுகளுக்கு முன் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப்பட்டு, 14 ஆம் நூற்றாண்டின் மீண்டும் இக்கோயில் சீரமைக்கப்பட்டது. பூவுலகில் கைலாசம் என்று இக்கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலிலும், துணைக்கோயிலிலும் பல ஓவியங்களும், சிலைகளும் காணப்படுகின்றன.
Similar News
News July 7, 2025
சங்கராச்சாரிய சுவாமிகளுடன் அமைச்சர்

குன்றத்தூர் நகைமுகவல்லி உடனுறை கந்தழீஸ்வரர் சுவாமி திருக்கோயிலில், நாளை (ஜூலை 7) குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, யாகசாலை முதற்கால பூஜை நிகழ்ச்சி இன்று (ஜூலை 6) நடைபெற்றது. இதில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜேந்திரர் சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார். அவருடன், அமைச்சரும் – காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பரசன் பங்கேற்றார்.
News July 6, 2025
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (06.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News July 6, 2025
சிறப்பு வாய்ந்த கோயில்கள்

காஞ்சிபுரத்தில் உள்ள 10 முக்கிய கோயில்கள். 1. ஏகாம்பரநாதர் கோயில், 2. காஞ்சி கைலாசநாதர் கோயில், 3. காஞ்சி காமாக்ஷி அம்மன் கோயில், 4. வரதராஜ பெருமாள் கோயில், 5. ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோவில், 6. ஸ்ரீ வைகுண்ட பெருமாள் கோயில், 7. ஸ்ரீ முக்தீஸ்வரர் கோயில், 8. ஐராவதனேஸ்வரர் கோயில், 9. சித்திரகுப்தர் கோயில், 10. த்ரிலோக்யநாதர் கோயில்.நம்ப ஊரில் உள்ளவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.