News February 14, 2025
காஞ்சிபுரம் எம்எல்ஏ முதலமைச்சருடன் சந்திப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் டெல்லியில் யுஜிசியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்தது தொடர்பாக திமுக மாணவர் அணி செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி. எழிலரசன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இதில் மூத்த அமைச்சர்கள் உடனிருந்தனர்.
Similar News
News February 20, 2025
அஞ்சல் துறையில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 53 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். <
News February 20, 2025
கணவனை கொல்ல கள்ளகாதலுடன் சதித்திட்டம்

ஸ்ரீபெரும்புத்தூரைச் சேர்ந்த திலீப் குமார் – ரேகா தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. ரேகாவுக்கு புனிதராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதால், திலீப் சண்டையிட்டுள்ளார். இதனால் கடந்த பிப்.15ஆம் தேதி புனித ராஜ் தனது நண்பர்கள் உடன் திலீப் குமாரை கொல்ல முயற்சி செய்தார். நல்வாய்ப்பாக திலீப் தப்பிவிட்டார். போலீசார், புனித குமார் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து ரேகாவை தேடி வருகின்றனர்.
News February 19, 2025
காஞ்சிபுரத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

காஞ்சிபுரத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள டாக்டர் பி எஸ் ஸ்ரீனிவாசன் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் வரும் பிப்.22 சனிக்கிழமை காலை 9 மணி முதல் ஒரு மணி வரை தனியார் துறை முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் நூற்றுக்கு மேற்பட்ட தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. ஷேர் பண்ணுங்க