News April 27, 2025
காஞ்சிபுரம் ஊராட்சிகளுக்கு பறந்த கலெக்டரின் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான மே 1 அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறும். இந்த கூட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். மிக முக்கியமாக மக்கள் பார்வையிட ஊராட்சி தகவல் பலகையில் வரவு செலவு எழுதிடவும், வரவு செலவு கணக்கு குறித்து பிளக்ஸ் பேனர் வைக்க வேண்டும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Similar News
News April 28, 2025
உங்க தாசில்தார் நம்பர் உங்ககிட்ட இருக்கா?

▶காஞ்சிபுரம் தாசில்தார் – 04427222776,
▶ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் – 04427162231,
▶உத்திரமேரூர் தாசில்தார் – 04427272230,
▶குன்றத்தூர் தாசில்தார் – 04424780449,
▶வாலாஜாபாத் தாசில்தார் – 04427256090
மறக்காமல் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க
News April 28, 2025
12ஆவது படித்திருந்தால் Data Entry Operator வேலை

ICSIL நிறுவனத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 8 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 18 – 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் மே 1ஆம் தேதிக்குள் இந்த <
News April 28, 2025
வீடுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வெயில் உஷ்ணத்தால் இரவு நேரங்களில் மக்கள் வீடுகளை திறந்து வைத்து படுத்து உறங்குகின்றனர். இதனை பயன்படுத்தி திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து பணம், நகை ஆகியவற்றை திருடும் சம்பவம் அதிகரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். எனவே இரவு நேரங்களில் வீடுகளை திறந்து வைத்து படுக்க வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளார். ஷேர் பண்ணுங்க