News August 3, 2024

காஞ்சிபுரம் ஊரக திட்ட இயக்குநர் மாற்றம்

image

காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், நேற்று (ஆகஸ்ட் 2) திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குநரான ஆர்த்தி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி உத்தரவு பிறப்பித்துள்ளார். பணியிட மாற்றத்திற்கான காரணம் தெரியவில்லை.

Similar News

News October 31, 2025

பிள்ளைப்பாக்கத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” முகாம்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் இன்று (அக்.31) திருப்பெரும்புதூர் ஒன்றியத்திலுள்ள பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் சிவன் கோயில் அருகில் காலை நேரத்தில் தொடங்கும். பொதுமக்கள் தங்களது மனுக்கள் மற்றும் குறைகளை அளித்து உடனடி தீர்வுகளை பெறலாம் என ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.

News October 31, 2025

காஞ்சியில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நவ.1 சனிக்கிழமை காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார். இதில் கிராம ஊராட்சியில் உள்ள அனைத்து வாக்காளர்களும் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார். இந்தக் கூட்டத்தில் ஊராட்சி நிர்வாகம் வடகிழக்கு பருவமழை உள்ளிட்ட எண்ணற்ற விஷயங்கள் விவாதிக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.

News October 31, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (அக்டோபர். 30) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!