News September 15, 2024
காஞ்சிபுரம் ஆட்சியர் உத்தரவு

வரும் 17ஆம் தேதி நபிகள் நாயகம் பிறந்தநாளான மிலாது நபி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் (IMFL) மற்றும் மதுபான சில்லறை விற்பனை கடைகள் (Tasmac Shops) உள்ள FL1, FL2, FL3, மற்றும் FL3A, FL4A ஆகியவை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் இன்று அறிவிப்பு வெளியிட்டார்.
Similar News
News December 9, 2025
காஞ்சிபுரம்: ரேஷன் கார்டில் பிரச்னையா? கலெக்டர் அறிவிப்பு!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரும் டிச.13ஆம் தேதி காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெறவுள்ளது. அதன்படி, சிங்காடிவாக்கம், மானாம்பதி, ஊத்துக்காடு, காட்ராம்பாக்கம், வளையகரணை ஆகிய இடங்களில் முகாம் நடைபெறும். இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 9, 2025
காஞ்சி மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

காஞ்சி பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <
News December 9, 2025
காஞ்சி: லஞ்சம் கேட்டால் உடனே CALL

காஞ்சிபுரம் மக்களே வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27237139) புகாரளிக்கலாம். இன்று உலக ஊழல் எதிர்ப்பு தினம் என்பதால் தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க


