News March 20, 2024

காஞ்சிபுரம் அருகே வெடிகுண்டு..?

image

காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே மாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிற்பகல் 12:00 மணி அளவில் மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக வந்தது. இந்நிலையில் உடனடியாக போலீசருக்கு தகவல் கொடுத்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளி முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News August 9, 2025

காஞ்சிபுரம் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ரேஷன் கார்டு திருத்தம் செய்யும் சிறப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 9) நடைபெறுகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள ஆலப்பாக்கம், உத்திரமேரூரில் உள்ள சிறுபினாயூர், வாலாஜாபாத்தில் உள்ள உள்ளாவூர், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தண்டலம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த முகாமானது நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<17349015>>தொடர்ச்சி<<>>

News August 9, 2025

காஞ்சிபுரம் ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு…

image

ரேஷன் கார்டு திருத்த முகாமில், ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்க்கை / நீக்கம், பெயர் மாற்றம், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க போன்றவற்றை செய்யலாம். அந்தந்த வட்டங்களில் எங்கு நடைபெறுகிறது என்பதை அதிகாரிகளை (காஞ்சிபுரம் – 044-27237424, 044-27222776, ஸ்ரீபெரும்புதூர் – 044-27162231, உத்திரமேரூர் – 044-27272230) தொடர்பு கொண்டு கேளுங்கள். ஷேர் பண்ணுங்க

News August 9, 2025

காஞ்சிபுரத்தில் இனி இது இருக்காது!

image

மத்திய அரசின், ‘ஆப்பரேஷன் ஸ்மைல்’ திட்டத்தின் மூலமாக பிச்சை எடுப்போர் இல்லாத நகரமாக காஞ்சிபுரத்தை மாற்ற திட்டமிடப்படப்பட்டுள்ளது. கோயில் வாசல்கள், சிக்னல்கள், பிரபலமான கடைகளின் வாசல்களில் பிச்சை கேட்டு தொந்தரவு செய்வதால் பக்தர்கள், வாடிக்கையாளர்கள் அதிருப்தியடைகின்றனர். இத்திட்டத்தில், அவர்களுக்கு திறன் பயிற்சி, காப்பகத்தில் தங்குமிடம், வியாபாரம் செய்ய உதவி போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

error: Content is protected !!