News May 6, 2024

காஞ்சிபுரம்: அதிகாலை 4 மணி அளவில் இடியுடன் மழை

image

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக காந்தி சாலை, மூங்கில் மண்டபம், பேருந்து நிலையம், பூ கடை சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று(மே 6) காலை 4 மணி அளவில் காற்றுடன் கூடிய இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த கோடை மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Similar News

News April 20, 2025

காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

image

▶வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27256090, ▶குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-24780449, ▶உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27272230, ▶ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27162231, ▶காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27222776, ▶ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் – 9444964899, ▶காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் – 9445000413. ஷேர் செய்யுங்கள்.

News April 20, 2025

ரூ.170 கோடி கடனுக்கு ஆணை வழங்கிய முதல்வர்

image

குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நேற்று (ஏப்ரல் 19) அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து, 8,951 பயனாளிகளுக்கு ரூ.34 கோடி மானியத்துடன் ரூ.170 கோடி கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கி சிறப்பித்தார்.

News April 20, 2025

கூட்டுறவு துறை குறித்து பாடல் எழுத அறிய வாய்ப்பு 

image

சர்வதேச கூட்டுறவு ஆண்டு கொண்டாடப்பட உள்ளதால், கூட்டுறவு துறை குறித்த தனி பாடல்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பாடல், 5 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பாடலுக்கு, 50,000 ரூபாய் ரொக்கம், கேடயம் வழங்கப்படும். தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் tncu08@gmail.com என்ற முகவரிக்கு வரும் மே.30ஆம் தேதிககுள் அனுப்ப வேண்டும் என காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.

error: Content is protected !!