News March 23, 2025
காஞ்சிபுரத்தில் மழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரத்தில் இன்று (மார்.23) காலை 11 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்
Similar News
News April 20, 2025
காஞ்சிபுரம் மாவட்ட வட்டாட்சியர் எண்கள்

▶வாலாஜாபாத் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27256090, ▶குன்றத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-24780449, ▶உத்திரமேரூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27272230, ▶ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27162231, ▶காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் – 044-27222776, ▶ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் – 9444964899, ▶காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் – 9445000413. ஷேர் செய்யுங்கள்.
News April 20, 2025
ரூ.170 கோடி கடனுக்கு ஆணை வழங்கிய முதல்வர்

குன்றத்தூர் சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நேற்று (ஏப்ரல் 19) அரசு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கலைஞர் கைவினைத் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்து, 8,951 பயனாளிகளுக்கு ரூ.34 கோடி மானியத்துடன் ரூ.170 கோடி கடன் ஒப்புதல் ஆணைகளை வழங்கி சிறப்பித்தார்.
News April 20, 2025
கூட்டுறவு துறை குறித்து பாடல் எழுத அறிய வாய்ப்பு

சர்வதேச கூட்டுறவு ஆண்டு கொண்டாடப்பட உள்ளதால், கூட்டுறவு துறை குறித்த தனி பாடல்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பாடல், 5 நிமிடங்களுக்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் பாடலுக்கு, 50,000 ரூபாய் ரொக்கம், கேடயம் வழங்கப்படும். தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் tncu08@gmail.com என்ற முகவரிக்கு வரும் மே.30ஆம் தேதிககுள் அனுப்ப வேண்டும் என காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ தெரிவித்தார்.