News October 24, 2024

காஞ்சிபுரத்தில் தொழிலை வளர்க்க கடன் – ஆட்சியர்

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு தொழில் கூட்டுறவு வங்கி (தாய்கோ) மூலம், கலைஞர் கடனுதவி திட்டத்தின் கீழ் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு 7% வட்டியில் ரூ.20 லட்சம் வரை, கடன் வழங்கப்பட உள்ளது. தகுதி: வயது 18-65. புதிய மற்றும் ஏற்கெனவே இயங்கி வரும் குறு உற்பத்தி நிறுவனங்கள், இந்த 044-27223562 எண்ணை தொடர்பு கொண்டு கடனுதவி திட்டத்தில் பயனடையுமாறு ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 10, 2025

காஞ்சி மக்களே வாடகை வீட்டுக்கு போறீங்களா?

image

காஞ்சி மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க

News December 10, 2025

காஞ்சி: SIR சந்தேகங்களுக்கு வாட்ஸ் ஆப் எண் வெளியீடு

image

தமிழ்நாட்டில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் வழங்கிய நிலையில் அதை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க நாளையே (டிச.11)கடைசி நாள். இது சம்பந்தமான அனைத்து சந்தேகங்களுக்கும் 1950 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்துள்ளது. மேலும் வாட்ஸ் ஆப் மூலமாக தொடர்பு கொள்வதற்கு 9444123456 என்ற எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது. பயனுள்ள தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

News December 10, 2025

காஞ்சி: 129 பவுன் நகை கொள்ளை வழக்கு.. கோர்ட் அதிரடி தீர்ப்பு

image

ஸ்ரீபெரும்புதூர் ஜே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பெருமாள். கடந்த மார்ச் மாதம், முத்துப்பெருமாள் வெளியே சென்றபோது, ​​வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 129 பவுன் தங்க நகை, 2½ கிலோ வெள்ளி மற்றும் ரூ.25 லட்சம் பணம் திருடப்பட்டது. இது தொடர்பாக விஜய் குமார் (31) மற்றும் கார்த்திக் (22) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இருவருக்கு 3 ஆண்டுகள் தலா ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

error: Content is protected !!