News April 16, 2025

காஞ்சிபுரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: நடவடிக்கை தேவை

image

காஞ்சிபுரத்தில், ஜல்ஜீவன் திட்டம் மூலம் பரவலாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது, பல இடங்களில் தற்போது வரை குடிநீர் பிரச்னை நிலவுகிறது. கிராமங்களிலும், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில், குழாய்களில் சிறிய அளவிலான மோட்டார் பொருத்தி, குடிநீரை முறைகேடாக பல ஆயிரம் லிட்டர் உறிஞ்சுகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுகிறது.

Similar News

News October 17, 2025

காஞ்சி: டூவீலர் மீது மோதிய லாரி-மாணவர்கள் பலி!

image

காஞ்சிபுரம் பி.எஸ்.கே தெருவைச் சேர்ந்தவர் அப்துல் அஜிஸ் (20), தேனம்பாக்கத்தைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம் (19) இருவரும், பொத்தேரியில் உள்ள கல்லுாரியில் படித்து வந்தனர். நேற்று இருவரும் கல்லுாரி முடிந்து, வண்டலுார்-வாலாஜாபாத் சாலையில் சென்றபோது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில், கல்லுாரி மாணவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒரகடம் போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

News October 17, 2025

காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் காவலர் விவரம்

image

காஞ்சிபுரத்தில் அக்டோபர்-16 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காரணத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசியின் வாயிலாக அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் ரோந்து பணியில் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News October 16, 2025

காஞ்சி: VOTER ID ல இத மாத்தனுமா??

image

காஞ்சிபுரம் மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.

இங்கு <>கிளிக் <<>>செய்யுங்க.

1. ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.

2. CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.

3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.

4.போட்டோ மாற்றம்

5. புது போட்டோவை பதிவிறக்கவும்

15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE .

error: Content is protected !!