News April 21, 2025
காஞ்சிபுரத்தில் கோடைகால பயிற்சி முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் 25.04.2025 முதல் 15.05.2025 வரை மொத்தம் 21 நாட்களுக்கு காலை 6.30 முதல் 8.30 மணி வரை மற்றும் மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலும் நடைபெற உள்ளது. பெயர்களை பதிவு செய்திட இளைஞர் நலன் அலுவலர் அலைபேசி எண்.7401703481 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News December 2, 2025
ஏவுகணை கிராமத்தில் கூரை சரிந்து பசுங்கன்று உயிரிழந்தது.

ஒழுகரை கிராமம் பழைய ரேஷன் கடை தெருவில் வசித்து வரும் விவசாயியான வையாபுரி மகன் கணேசன் இவர் கால்நடை வளர்த்து விவசாயம் செய்து வருகிறார். தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அவர் வீட்டு பின்புறம் அமைக்கப்பட்டு இருந்த சிமென்ட் சீட் கூரை திடீரென சரிந்து விழுந்த போது அங்கு கட்டப்பட்டிருந்த பசு கன்று மேல் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பசு கன்று உயிரிழந்தது. இதனால் விவசாய குடும்பம் சோகத்தில் ஆழ்ந்தது.
News December 2, 2025
வாலாஜாபாத் அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருள் விற்ற நபர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ராஜ வீதியில் உள்ள நூர்ஜகான் ஸ்டோரில் அரசால் தடை செய்யப்பட்ட கொடு்கா பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த சம்மந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டு முகமதியர் தெருவை சேர்ந்த ஆதம்பா பாட்ஷா இன்று (டிச.01) வாலாஜாபாத் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1616 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
News December 2, 2025
காஞ்சிபுரத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

‘டிட்வா’ புயல் காரணமாக இன்று (டிச.2) காஞ்சிபுரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் உத்தரவிட்டுள்ளார். நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க!


