News August 9, 2024
காஞ்சிபுரத்தில் இன்று கனமழைக்கு பெய்ய வாய்ப்பு

காஞ்சிபுரத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக, மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே வெளியே செல்லும்போது குடை எடுத்துச் செல்லுங்கள். இன்று மழை பெய்யுமா?
Similar News
News November 23, 2025
காஞ்சி: HOUSE OWNER பிரச்சனையா? இத பண்ணுங்க!

வாடகை வீட்டில் வசிப்பவர்களா நீங்கள்? வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் கவலைப்படாதீர்கள். உங்களின் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.
News November 23, 2025
காஞ்சியில் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரின் மக்கள் நல்லுறவு மையக் கூட்ட அரங்கில் வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நவம்பர் 24 காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் கலைச்செல்வி மோகன் அறிவித்துள்ளார், எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News November 23, 2025
காஞ்சி மக்களை சந்திக்கும் த.வெ.க தலைவர் விஜய்

சுங்குவார்சத்திரம் அருகே தனியார் கல்லூரியில் த.வெ.க தலைவர் விஜய் தலைமையில் இன்று கூட்டம் நடைபெறுகிறது. இதில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். QR குறியீடு உள்ள அனுமதி அட்டை பெற்ற 2,000 பேர் மட்டுமே இதில் அனுமதிக்கப்படுவர். இதற்காகக் கல்லூரியைச் சுற்றி 1 கி.மீ தூரத்திற்கு வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் நிர்வாகிகள், பெண்கள் & விவசாயிகளுடன் விஜய் கலந்துரையாட உள்ளார்.


