News February 17, 2025
காசி விசுவநாதர் கோவிலில் கொடிமரங்கள் பிரதிஷ்டை

இந்தோனேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 2 கொடிமரங்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டு கொடிமரம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக இன்று(17ஆம் தேதி) காலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. முன்னதாக கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றன.
Similar News
News November 7, 2025
தென்காசி முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ரெஜினி இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ரேணுகா தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக கடந்த செவ்வாய்க்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தென்காசி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக இன்று ரேணுகா பதவியேற்றுக் கொண்டார் அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.
News November 7, 2025
தென்காசி: பெண் பிள்ளைகள் திட்டம் ரூ.50,000 பெற இது முக்கியம்!

தென்காசி மக்களே பெண் குழந்தைகள் பாதுகாக்கும் பொருட்டு தமிழக அரசு 50,000 வழங்குகிறது.
தேவையான ஆவணங்கள்:
பெற்றோரின் ஆதார் கார்டு
குடியிருப்பு சான்றிதழ்
வருமான சான்றிதழ்
சாதிச் சான்றிதழ்
குழந்தை பிறப்புச் சான்றிதழ்
வங்கி பாஸ்புக்
பாஸ்போர்ட் புகைப்படம்
இத்துடன் உங்க மாவட்ட சமூக நல அலுவரிடம் விண்ணப்பியுங்க.
தொடர்புக்கு: 0462-2576265. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க.
News November 7, 2025
தென்காசி: எஸ்.ஐ.ஆர் படிவத்தை நிரப்புவது எப்படி?

வாக்காளர் பட்டியலை திருத்த எஸ்.ஐ.ஆர் (SIR) படிவம் வழங்கபடுகிறது. அதில் உங்கள் புதிய புகைப்படத்தை ஒட்டி விவரங்களான பிறந்த தேதி, ஆதார், கைபேசி எண், பெற்றோர்/துணைவர் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். 2002 வாக்காளர் பட்டியல் விவரங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டு படிவத்தில் ஒன்றை பூர்த்தி செய்து, டிச.04ம் தேதிக்குள் வாக்குச்சாவடி அலுவலரிடம் ஒப்படைக்கவும். இத அனைவருக்கும் SHARE பண்ணுங்க..!


