News March 25, 2025
காசநோய் பாதிப்பில்லா 92 ஊராட்சிகள்

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உலக காசநோய் தின நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா பங்கேற்றுப் பேசும்போது, இந்திய அளவில் 25 லட்சம் பேரும், தமிழகத்தில் 1 லட்சம் பேரும், மதுரை மாவட்டத்தில் 6 ஆயிரம் பேரும் காசநோயாளிகளாகக் கண்டறியப்படுகின்றனர்.மேலும் கடந்த ஆண்டு, மதுரை மாவட்டத்தில் காசநோய் பாதிப்பில்லாத 92 ஊராட்சிகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News November 7, 2025
மதுரை மாவட்ட காவல் ரோந்து அதிகாரிகள் விவரம்

மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் இன்று (6.11.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மக்களின் இலகுவான தொடர்புக்காக வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்களின் பாதுகாப்பையும் சட்ட ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News November 6, 2025
மதுரையில் நாளை மின்தடை

மதுரையில் நாளை (நவ7) இந்தியன் ஆயில் நிறுவனம், காஸ் கம்பெனி, கப்பலூர் ஹவுசிங் போர்டு, வேடர் புளியங்குளம், கூத்தியார்குண்டு, தோப்பூர், முல்லை நகர், பிஆர்சி காலனி, நிலையூர், ஆர்வி பட்டி, கைத்தறி நகர், எஸ்ஆர்வி நகர், இந்திரா நகர், கப்பலூர், சிட்கோ, மெப்கோ கம்பெனி, தியாகராஜர் மில், கருவேலம்பட்டி, சம்பகுளம், பரம்புபட்டி, மில் காலனி, எஸ்.புளியங்குளம், சொக்கநாதன் பட்டி, தர்மத்துப்பட்டி பகுதிகளில் மின்தடை.
News November 6, 2025
மதுரை: +1 மாணவி தூக்கிட்டு தற்கொலை

மதுரை, சொக்கநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணவி(16). மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். 3 மாதத்திற்கு முன்பு இவருக்கு கை வலி ஏற்பட, அவரால் எழுத முடியவில்லை. நோய்க்கு சிகிச்சை பெற்றும் வலி குறையாததால் மனமுடைந்து வீட்டில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


