News August 3, 2024

காங்கேயத்தில் திருப்பூர் கலெக்டர் மலர்தூவி மரியாதை

image

சுதந்திரப் போராட்ட வீரரான தியாகி தீரன் சின்னமலையின் 219வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் காங்கேயம் மேலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மாவீரன் தீரன் சின்னமலை சமுதாய நலக்கூடத்தில் அவரது உருவப்படத்திற்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினர் உடனிருந்தனர்.

Similar News

News October 16, 2025

திருப்பூரில் வெளுக்கப்போகும் மழை!

image

தென்மேற்கு பருவமழை முடிவடைந்த நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று, திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

News October 15, 2025

திருப்பூரில் இரவு நேர ரோந்து பணியில் காவலர்

image

திருப்பூர் மாநகரில் இரவு நேரங்களில் கொள்ளை வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் கே வி ஆர் சரக உதவி காவல் ஆணையர் ஜான் தலைமையிலான போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். அவர்களின் விவரம் மற்றும் தொலைபேசி எண் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

News October 15, 2025

திருப்பூர்: ரிதன்யா வழக்கில் அதிரடி உத்தரவு

image

திருப்பூர் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்ட இளம்பெண் ரிதன்யா (27 வயது) வரதட்சணை மரண விவகாரத்தில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார் தொடர்ந்த வழக்கில் தற்போது ரிதன்யாவின் 2 செல்போன்களை தடயவியல் சோதனை செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் ரிதன்யா தனது தந்தைக்கு வாட்ஸ் ஆப்பில் குரல் குறிப்புகளை அனுப்பியது வெளியானது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!