News March 26, 2024

காங்கிரஸ் வேட்பாளர் நாளை மனு தாக்கல்

image

நெல்லை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் நாளை (மார்ச் 27) மதியம் 12 மணியளவில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இதையடுத்து, வேட்புமனுத் தாக்கல் நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்படி கிழக்கு மாவட்ட தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Similar News

News May 7, 2025

பாவங்கள் நீங்க வேண்டுமா பாபநாசத்திற்கு வாருங்கள்

image

நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் ஸ்தலத்தில் அடியார்கள் வந்து தீர்த்த நீராடி பாபநாசரை வழிபட்டால் பாவங்கள் நீங்கும். எனவே இத்தலம் பாபநாசம் என்றானது. இத்தலத்தில் அகஸ்தியருக்கு ஈசன் திருக்கல்யாண கோலம் காட்டியதால் இத்தலத்தை கல்யாணபுரி என்றும் அழைப்பர். இக்கோவிலில் வரும் நான்காம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News May 7, 2025

நெல்லை – செங்கோட்டை ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி

image

நெல்லை – செங்கோட்டை இடையே இயக்கப்படும் பயணிகள் தரையில் கூட்டம் அலைமோதும் நிலையில், ஒரு ரயிலில் மட்டும் இரு மார்க்கத்திலும் கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டது. அதிகாலை மற்றும் மாலை நேர ரயில்களில் முக்கியத்துவம் கருதி, அடுத்த 10 நாட்களுக்கு கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகத்தினர் உறுதி அளித்துள்ளதாக ராபர்ட் ப்ரூஸ் எம்பி தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் 23 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

image

திருநெல்வேலி மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாட்சியர்கள் 23 பேர் பணியிடை மாற்றம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் உத்தரவிட்டு உள்ளார். அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம், மானூர் உள்ளிட்ட பல்வேறு வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும், சிலருக்கு பதவி உயர்வுடன் கூடிய வட்டாட்சியர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது

error: Content is protected !!