News March 26, 2024
காங்கிரஸ் பெண் நிர்வாகிக்கு கங்கனா பதிலடி

தனது கவர்ச்சிப் படத்தை பதிவிட்டு விமர்சித்த காங்கிரஸை சேர்ந்த சுப்ரியாவுக்கு பாஜக மண்டி தொகுதி வேட்பாளர் கங்கனா ரனாவத் பதிலடி கொடுத்துள்ளார். ஒரு நடிகையாக அனைத்து விதமான கேரக்டரில் நடிப்பதே என்னுடைய பணி. கவர்ச்சியாக, வீரமாக, பெண்ணியவாதியாக என அனைத்து விதமாகவும் இந்த 20 ஆண்டுகளில் நடித்துள்ளேன். எனவே, கவர்ச்சிப் படத்தைப் போட்டு கொச்சைப்படுத்த முயற்சிக்க வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News April 19, 2025
சவுதி பறக்கும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி வரும் 22ஆம் தேதி 2 நாள் பயணமாக சவுதி அரேபியா செல்ல உள்ளார். சவுதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று, அவர் இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இருநாட்டு தலைவர்களும் வர்த்தகம் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News April 19, 2025
ரேஷன் கடைகளில் இனி அச்சிடப்பட்ட ரசீது: அரசு

ரேஷன் கடைகளில் இனி அனைத்து அட்டைதாரர்களுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளே வழங்கப்பட வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் காகித ஆலையில் இருந்து ரசீதுக்கான காகிதங்கள் அனுப்பப்படும், அதன்பிறகு மே மாதத்தில் இருந்து அனைவருக்கும் ரசீதுகள் வழங்க வேண்டுமென கூறியுள்ளது. தற்போது கைகளாலேயே எழுதி ரசீது அளிக்கப்படுகிறது. அதற்கு மாற்றாக அச்சிட்ட ரசீது வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.
News April 19, 2025
Chewing Gum மூலம் உயிர் தப்பிய மாணவர்கள்

துப்பாக்கிச்சூட்டில் இருந்து உயிர் தப்பிய அனுபவத்தை ஃபுளோரிடா பல்கலை. மாணவர்கள் பகிர்ந்துள்ளனர். கேம்பஸ் அருகில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டதும், Chewing Gum-ஐ பயன்படுத்தி வகுப்பறை ஜன்னல்களை பேப்பரால் மூடி உள்ளே மறைந்து கொண்டதாக அவர்கள் கூறியுள்ளனர். அதேபோல், இறந்தது போல் நடித்து உயிர் தப்பியதாக மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார். பொதுவெளியில் இளைஞன் நடத்திய தாக்குதலில், 2 பேர் கொல்லப்பட்டனர்.