News March 19, 2024
காங்கிரஸ் நெல்லை வேட்பாளராக மீண்டும் ராமசுப்பு?

பாராளுமன்ற தேர்தலில் திருநெல்வேலி தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கியது.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு தலைவர்கள் திருநெல்வேலி தொகுதி தங்களுக்கு ஒதுக்கப்படும் இன்று எதிர்பார்ப்பில் உள்ளனர் எனினும் முன்னாள் எம்பி ராமசுப்புவுக்கு தான் மீண்டும் சீட் கிடைக்கும் என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
Similar News
News November 7, 2025
வினாத்தாள் மாறியது குறித்து அதிகாரிகள் விசாரணை

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று பிகாம் 3ம் ஆண்டு அரியர்ஸ் செமஸ்டர் தேர்வுக்கு மாணவரிடம் வழங்கப்பட்ட வினாத்தாள் மாறியது. இது குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கூறுகையில் சென்னையில் இருந்து வினாத்தாள் அனுப்பி வைக்கப்படும் அந்த பார்சலை தேர்வு மையத்தில் பிரிப்பார்கள். குறியீட்டு எண் சரியாக இருந்த நிலையில் வினாக்கள் மாறியது குறித்து விசாரிக்கப்படும் என்றார்.
News November 7, 2025
நெல்லையில் 20 நாள் போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

நெல்லை கலெக்டர் அலுவலகம் வழியாக மேலப்பாளையம் பஸ் நிலையம் வரை செல்லும் வழித்தடத்தில் பாதாள சாக்கடை அமைக்கும்படி நடைபெறுவதால் 11ம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 20 நாட்கள் இந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. வாகனங்கள் தெற்கு புறவழிச் சாலை குறிச்சி சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். மேலப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் குறிச்சி சந்திப்பு விஎஸ்டி ரவுண்டானா வழியாக வரவேண்டும்.
News November 7, 2025
நெல்லை: சவுதியில் சேவையாற்ற வாய்ப்பு – ஆட்சியர்

நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமார் இன்று விடுத்துள்ள அறிக்கையில்; 2026 ஆம் ஆண்டு புனித ஹச் பயணம் மேற்கொள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹச் பயணிகளுக்கு சேவையாற்ற மாநில ஹச் ஆய்வாளர்களை தற்காலிகமாக சவுதி அரேபியா அனுப்ப விண்ணப்பிக்கலாம். தற்காலிக பணி காலம் சுமார் 2 மாதம் மத்திய மாநில அரசு ஊழியர்கள் துணை ராணுவ படை அலுவலர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு hajcommittee.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்.


