News August 26, 2024
காங்கிரஸ் தலைவருக்கு முருகன் பிரசாதம்

பழனியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டின் அருட்பிரசாதம், சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் இன்று வழங்கபட்டது. இந்நிகழ்வில் நகரத் தலைவர் முத்து விஜயன், மாவட்டத் துணைத் தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான முருகானந்தம், மண்டல தலைவர் வீரமணி, மாவட்ட செயலாளர் ராமநாத கிருஷ்ணன், மண்டல துணைத் தலைவர் ரகு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News December 17, 2025
பழனி போலீஸ் பெயரில் போலி வேட்டை? SP கடும் எச்சரிக்கை!

பழனி காவல்துறை கண்காணிப்பாளர் தனஞ்ஜெயன் விடுத்துள்ள அறிவிப்பில், பழனி அடிவாரத்தில் புதிதாக கடை அமைக்க வியாபாரிகளிடம் காவல்துறை கண்காணிப்பாளர் பெயரைச் சொல்லி பணம் வசூலிப்பதாக தகவல் வருகிறது. புதிய கடை அமைக்க தேவஸ்தானம் நகராட்சியிடம் தான் அனுமதி பெற வேண்டும். இதுபோன்று மோசடி செய்தால் 98847-41609 என்ற காவல்துறை எண்ணுக்கு அழைத்து புகார் அளிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணூங்க!
News December 17, 2025
அறிவித்தார் திண்டுக்கல் கலெக்டர்!

திண்டுக்கல்:-தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நாளை 18/12/2025 வியாழக்கிழமை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. முன்னனி வங்கிகள் கலந்து கொண்டு, மகளிர் தொழில் முனைவோருக்கு உடனுக்குடன் வங்கி கடனுக்கான ஒப்புதல் வழங்கபடும் என்று மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். அருமையான தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 17, 2025
மகளிர் கடன் முகாம்-ஆட்சியர் அறிவிப்பு..!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்ஒரு அறிவிப்புவிடுத்தார்.தமிழ்நாடு மகளிர்தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் பெண்கள்தொழில் தொடங்க வங்கி கடன் சிறப்பு முகாம்,ஆட்சியர்அலுவலகத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை)நடக்கிறது. இதில் முன்னோடிவங்கி மேலாளர்கள்விண்ணப்பங்களை பரிசீலித்துகடன்ஒப்புதல்வழங்க உள்ளனர்.தொழில் ஆர்வமுள்ளபெண்கள்ஆதார் அட்டை,ரேஷன்கார்டு சாதிசான்றிதழ்,கல்வி சான்றிதழுடன்வந்து பங்கேற்கலாம் என்றார்


