News January 24, 2025

காங்கிரஸ் கட்சி நிர்வாகி படுகொலை?

image

காரைக்குடி முத்துப்பட்டிணம் பகுதியை சேர்ந்த பாண்டி (45) காங்கிரஸ் கட்சி வார்டு பொறுப்பில் நிர்வாகியாக உள்ளார். இன்று அதலை கண்மாய் பகுதியில் உள்ள அவரது வயக்காட்டில் படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். அப்பகுதியில் உறவினர்கள் சென்று பார்த்தபோது உடல் முழுவதும் வெட்டுப்பட்டு பாதி உடல் மண்ணுக்குள் புதைந்த நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 1, 2025

சிவகங்கை பேருந்து விபத்து; பிரதமர் மோடி நிவாரணம்

image

பிரதமர் நரேந்திர மோடி இன்று 1.12.25 வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று 30.11.25 சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு மத்திய அரசு நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News December 1, 2025

சிவகங்கை: தொலைந்த PHONE-ஐ கண்டுபிடிப்பது இனி சுலபம்

image

இன்றைய காலக்கட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. அத்தகைய செல்போன் தொலைந்து விட்டால் பலருக்கு என்ன செய்வதென்று தெரியாது?. அப்படி உங்களது போன் தொலைந்து / திருடப்பட்டுவிட்டால் <>SANCHAR SAATHI<<>> என்ற செயலியில் சென்று உங்களது செல்போன் நம்பர், IMEI நம்பர் உள்ளிட்ட தகவல்களை பதிவிட்டு புகார் அளிக்கலாம். அதன் பின் உங்களது தொலைந்த போன் BLOCK செய்யப்பட்டு, கண்டுபிடிக்கப்படும். SHARE IT.

News December 1, 2025

காரைக்குடி விபத்து: மத்திய அரசு நிவாரணம் அறிவிப்பு

image

காரைக்குடியிலில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் மற்றொரு அரசு பேருந்தும் நேற்று எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி சாலை விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 11 நபர்கள் இறந்துள்ளதாகவும் 30மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய அரசின் சார்பில் 2 லட்சம் ரூபாயும், காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படுகிறது.

error: Content is protected !!