News March 15, 2025
கஷ்டங்கள் தீர்க்கும் காட்டுவீர ஆஞ்சநேயர்…

தேவசமுத்திரம் கிராமத்தில் காட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில் அமைந்துள்ளது. போதுவாக அனுமன் கோயில்களில் வடைமாலை, வெற்றிலை, துளசி மாலை, வெண்ணெய் காப்பு, சந்தனக்காப்பு சாத்தி வழிபடுதல் விசேஷம். ஆனால் இங்கு தேங்காய் நேர்த்திக்கடன் விசேஷம். நீங்கள் முழுத்தேங்காயை மனதார வேண்டி அனுமனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினால் வேண்டுதல்கள் 3 மாதங்களுக்குள் நிறைவேறும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. ஷேர் பண்ணுங்க
Similar News
News March 16, 2025
இன்டா்ன்ஷிப் பயிற்சி விண்ணப்பிக்க கால அவகாசம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தின் கீழ் 12 மாத இன்டர்ன்ஷிப் பயிற்சிக்கு 16 நிறுவனங்கள் சுமாா் 1,536 இளைஞா்களுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ, டிகிரி மற்றும் ஐடிஐ படித்த 21 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் மாா்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News March 16, 2025
தண்டவாளத்தில் வீசப்பட் தொழிலாளி உடல்

சூளகிரியை சேர்ந்தவர் லோகநாதன், கடந்த மாதம் வீட்டிலிருந்து சென்றவர் திரும்பவில்லை என தாய் மணிமேகலை புகார்படி, சூளகிரி போலீசார் தேடினர். இந்நிலையில், கர்நாடகா மாநில ரயில்வே போலீசார், சில நாட்களுக்கு முன், தண்டவாளத்தில், வாலிபர் சடலம் கிடப்பது குறித்து விசாரித்தனர். இந்நிலையில் அது லோகநாதன் என தெரிந்தது. அவரை மர்ம கும்பல் கொலை செய்து சடலத்தை வீசி சென்றிருக்கலாம் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
News March 15, 2025
மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்களுக்கு வேலை

208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட உள்ளதால், மாவட்ட சுகாதார சங்கம் சார்பில் 208 மருத்துவர்கள் மற்றும் நர்சுகள், 832 மருத்துவ பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அங்கு நியமனம் செய்யப்பட உள்ளனர். மருத்துவர்களுக்கு மாதம், ரூ.60,000, நர்சுகளுக்கு ரூ.18,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <