News March 27, 2024

கழுத்தில் தாலி அணிந்தபடி வேட்பு மனு தாக்கல்

image

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எம்.எஸ்.ஆறுமுகம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கழுத்தில் தாலி அணிந்தபடி இன்று வேட்பு மனு தாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் கடல்நீரில் மதுபானத்தை தயாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

Similar News

News October 16, 2025

ALERT: செங்கல்பட்டில் கனமழை பெய்யும்!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று (அக்.16) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், பரவலாக மழையை எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்.

News October 16, 2025

நீச்சல் போட்டியில் அசத்தல்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாநில அளவில் கல்லூரி மாணவர்களுக்கான நீச்சல் போட்டி, வேளச்சேரியில் நடைபெற்று வந்தது. இதன் இறுதிப் போட்டி நேற்று (அக்.14) நடந்த நிலையில் செங்கல்பட்டைச் சேர்ந்த நிதிக் நாதெல்லா 100 மீட்டர் பேக் ஸ்டோர்க் போட்டி, கவீன்ராஜ் 200 மீட்டர் பட்டர்பிளை போட்டி, யாதேஷ்பாபு 100 மீட்டர் பிரஸ்ட் ஸ்டோர்க் போட்டியில் முதலிடம் பெற்று பதக்கங்களை வென்றனர்.

News October 15, 2025

செங்கல்பட்டு: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, காவல்துறை இன்று இரவு ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, மாமல்லபுரம், மற்றும் மதுராந்தகம் ஆகிய மூன்று வட்டங்களுக்குட்பட்ட ஒன்பது காவல் நிலையங்களில், துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) தலைமையில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.

error: Content is protected !!